Google

Friday, 6 June 2008

காதல்

காதலும் கதிரவன்தான்...
ஆனால் எப்போது தோன்றும் ?
எப்போது மறையும் ? என்று
உறுதியாகச் சொல்லமுடியாது..

காதலினால் இணைந்த இதயங்கள் பல..
ஆனால் சிதைந்த இதயங்கள் ?
எண்ணிலடங்காது..

காதலன் முதலில் கவிஞனாவான்..
கவிஞன் பிறகு பைத்தியமாவான்..
இந்த சுழலில் சிக்காதவன் கணவனாவான்...
ஆனால் யாருக்கு என்று மட்டும் தெரியாது..

காதலி மட்டும் ஏனோ அதிகம்
கவி பாடுவதில்லை.. காதலர்களைப்
போல் வெளிப்படையாய்..
மற்றபடி சுழலின் பிற நிலைகள்
இவர்களுக்கும்தான்..

காதல் தோல்விகளினால்
கல்லறை கதவுகளும், மதுக்கடை கதவுகளும்
மட்டும்தான் திறக்கப்பட வேண்டுமா ?
மனக்கதவுகளும் அறிவுக்கண்களும்
திறக்கப்படக்கூடதா ?

நேற்றைய காதலர்களே! நிலையற்ற
இந்த வாழ்வில் உங்கள் மனங்களை
நிலைப்படுத்திக் கொள்ளுங்கள்...

இருபது வருடம் பாசமுடன் வளர்த்த
பெற்றோரை (து)மறக்கும் போது
சாகத் துணியாத, நிலை பிறழாத நீங்கள்,
இரண்டு மாதம்(வருடம்) காதலித்த
(ஆ)பெண்ணிற்காக சாகத் துணிவதும்
நிலை பிறழ்வதும் எப்படிச் சாத்தியமாகின்றன ?
உண்மை காதல் என்று இதற்கு
விளக்கம் கூறி, உங்களது மனம் அறிவை
ஏமாற்றுவதை உணருவதில்லை நீங்கள்.

இங்கு நமக்கு கொடுக்கப்பட்ட நேரம்
காதலிக்க மட்டுமன்று..
கடமைகளையும் காணத்தான்..
காதலித்துப் பாருங்கள்! உங்கள்
கடமைகளை! கைகூடும் நீங்கள்
நினைக்காத காதலும் கூட..

Thursday, 5 June 2008

அவளது பெயர்..

ஏனோ தெரியவில்லை..
தேர்வெழுத தயங்கும் எனது
விரல்கள் அவள் பெயரெழுத
மட்டும் துடிக்கின்றன..
ஆனால் என்ன செய்ய ?
என்னைப்போல் அதற்கும்
தெரியவில்லை..வேறென்ன ?
அவளது பெயர்தான்..


( பி.கு : தெரிந்தால் சொல்லுங்கள்.. ;))

Monday, 19 May 2008

காதலி

எனது கற்பனைகள் அனைத்திற்கும்
கருவானவள்….
பல வருடங்களாய் நான் தேடி
அலைந்தவள்….
நான் இமையாக காக்கத் துடிக்கும்
விழியானவள்….
என் தலை கோதும் விரல்களுக்கு
சொந்தமானவள்….
மொத்தத்தில் எனது இரண்டாம்
தாயவள்….

Wednesday, 26 March 2008

மழலை - மௌனம்

தாய் மட்டுமே அறிவாள்
குழந்தையின் மழலையை..
நான் மட்டுமே அறிவேன்
அவளின் மௌனத்தை..
ஏனெனில் நானும் ஒரு
தாய்தான் அவளுக்கு..

Tuesday, 25 March 2008

தற்கொலை

எனது இதயம் துடிப்பதை கூட
நிறுத்திவிட்டேன்...
அங்கு குடி இருக்கும் உன்னை
வெளியேற்ற மனமின்றி...

Sunday, 23 March 2008

நம்பிக்கை

இலையுதிர் காலங்களில்,
பசுமையான இலைகளை
இழந்ததற்க்காக வருந்துவதுமில்லை !
வீழ்ந்து கிடப்பதுமில்லை ! மரங்கள்...
வசந்தம் நமக்கும் வரும் என்று
காத்திருக்கின்றன நம்பிக்கையுடன் !
தோழா(ழி) ! துவண்டுவிடாதே !
துன்பங்களை கண்டு !
நிமிர்ந்து நில் மரம் போல் !
உனது காலம் வரும் ஒரு நாள் !
அதுவரை காத்திரு நம்பிக்கையுடன்..

Thursday, 13 March 2008

தவறுகள் சில..

உன்னை பார்த்த பொழுது தோன்றியது
- காதலிக்க வேண்டுமென்று !
உன்னை காதலித்த பொழுது தோன்றியது
- மணமுடிக்க வேண்டுமென்று !
உன்னை மணந்தபின்…தோன்றுகிறது…
- உன்னை ஏன் பார்த்தோமென்று !

Monday, 10 March 2008

மழை - ஹைக்கூ

கண் விழித்துப் பார்த்தேன்...
காணவில்லை அவளை...
நேற்று இரவு பெய்த மழை..